0

Enter your keyword

மர துவரை அல்லது பல்லாண்டு துவரை 

மர துவரை அல்லது பல்லாண்டு துவரை 

மர துவரை அல்லது பல்லாண்டு துவரை  விதை 

நம் நாட்டில் நெல்லையும், கோதுமையையும் அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துவிட்டு பருப்பு வகைகளையும், எண்ணெய் வித்துகளையும் இறக்குமதி செய்யும் சூழலில் உள்ளோம். இந்நிலையில் விவசாயிகள், வீட்டுத்தோட்டம் வைத்திருப்போர் தங்களுக்கான துவரையையாவது அவரவர் நிலத்தில் உற்பத்தி செய்து கொள்ளட்டும் எனும் எண்ணத்தில் மர துவரை எனும் பல்லாண்டு துவரை ரகத்தின் விதையை வழங்க இருக்கின்றோம்.குறிப்பாக நிலங்களில் தோட்டம் அமைக்க இடம் உள்ளோருக்கு மர துவரை விதை தரலாமென முடிவு செய்துள்ளோம்.. 10 மரம் இருந்தால் போதும். குடும்பத்திற்கு தேவையான துவரம்பருப்பை இந்த மரங்களிலிருந்து பூர்த்தி செய்து கொள்ளலாம். 5-6 மாதத்தில் காய்ப்பிற்கு வந்து விடும். 10 அடி உயரம் வரை வளரும்.குறைந்தது 5 வருடம் காய்ப்பு கொடுக்கும். காய்ப்பிற்கு வந்த ஓரிரு மாதங்களுக்கு பிறகு இவற்றிலிருந்து விதைகளை எடுத்து விதைக்கவும் பயன்படுத்தலாம். வறட்சி தாங்கி வளரும் துவரை ரகங்களை பயிரிட்டு வறட்சி சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

குறிப்பு: 15 விதை வீதம் தர இருக்கின்றோம்.
விதை பெறுபவர்களின் தொடர்பு எண் எதிர்காலத்தில் அந்த பகுதியில் யாரும் மரத்துவரை விதை கேட்டால் அவர்களுக்கு வழங்கலாமென இருக்கின்றோம்.

விதை பெற விரும்புவோர் தங்களின்#பெயர் #முகவரி #தொடர்பு_எண்ஆகிய தகவல்களுடன் “மரத்துவரை விதை வேண்டும்” என்ற செய்தியை 8526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பவும். நேரில் சந்திக்க வாய்ப்புள்ளவர்கள் நேரிலும் மற்றவர்களுக்கு கொரியரிலும் அனுப்பலாமென உள்ளோம்.
கொரியர் அனுப்ப வேண்டுமென்றால் விதை+கொரியர் 50₹.

நன்றி
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

No Comments

Post a Comment

Your email address will not be published.