0

Enter your keyword

30 சுரை ரகங்கள் (30 Bottle gourd variety)

30 சுரை ரகங்கள் (30 Bottle gourd variety)

30 ரக சுரைக்காய் விதைகள் தேவைப்படுவோர் பெயர், முகவரி, தொடர்பு எண் உடன் 30 சுரை ரகங்களின் விதை தேவை என குறிப்பிட்டு 8526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்.

30 variety bottle gourds seeds available Now.. Whatsapp to 8526366796 – (name, address, contact no, mention 30 variety bottle gourds)

சாதரணமாக பச்சை காயை உணவுக்காகவும், காய்ந்த குடுவையை மருந்துகள், தானியங்கள், விதைகள், இதர பொருட்கள் சேமிக்கவும் பயன்படுத்தலாம். சந்தையில் கிடைக்கும் சுரை ரகங்கள் பெரும்பாலும் ஒரே வடிவிலான நீள சுரையாக மட்டும் உள்ளது.. இந்த ரகங்கள் போக்குவரத்திற்கு உகந்ததாக இருப்பதால் இந்த ரகங்கள் மட்டுமே சந்தையில் இருக்கின்றது. கிராமப்புற சந்தைகளில் குடுவை ரகங்கள் கிடைக்கின்றன.. அவை உள்ளூர் சந்தைகளில் மட்டுமே விலை போகின்றன..

குடுவை சுரை, கும்பச்சுரை, சிட்டு சுரை, பாம்பு சுரை, ஆளுயர சுரை, சட்டி சுரை, உருட்டு சுரை, வாத்து வடிவ சுரை, நீர் குமிழ் சுரை என பல்வேறு வடிவங்களில் உள்ளது..

வெளிர்பச்சை சுரை, அடர்பச்சை சுரை, வெளிர்பச்சி காயில் வெள்ளை புள்ளி சுரை, அடர்பச்சை காயில் வெள்ளை புள்ளி சுரை என வண்ணங்களில் உள்ளது..

பச்சைகாய்கள் உணவுக்காகவும்; மருந்தாகவும் பயன்படுவது போல, குடுவைகள் தானியங்கள், விதைகள், மருந்துகள் சேமிக்கவும்; நீச்சல் பழகும் பாதுகாப்பு குடுவைகளாகவும் பல்வேறு பயன்களுக்காகவும் சுரைக்காய் இரகங்கள் உதவுகின்றன..

பாம்பாட்டிகள் வைத்திருந்த மகுடி சுரைகள், பனையேறும் தொழில் செய்தோர் வைத்திருந்த பானை சுரை, வைத்தியர்கள் மருந்துகள் சேமித்து வைப்பதற்கு பயன்படுத்திய கசப்பு சுவையான பேய் சுரை என பல்வேறு இரகங்கள் அரிதான ரகங்களாகவும் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மை சுற்றிலும் எண்ணற்ற மரபு சுரை ரகங்கள் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கின்றன..

இவற்றில் சில ரக சுரை ரகங்களை 2014 ஆம் ஆண்டு முதல் சேகரித்து வந்தோம். 30 ரகங்களை வடிவம், வண்ணத்தை பொருத்து பிரித்து விதைகளை விவசாயிகளுக்கும், வீட்டுத்தோட்ட ஆர்வலர்களுக்கும் கொடுக்கின்றோம்.
தேவைப்படுவோர் பெற்றுக்கொள்ளவும்..

நன்றி..
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்..

No Comments

Post a Comment

Your email address will not be published.