வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி
30 நாட்களுக்கான வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சி
நஞ்சில்லாத உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால், இடப்பற்றாக்குறை, மண்ணின் தன்மை, மற்றும் போதிய வழிகாட்டுதல் இன்மை ஆகியவை பெரும் தடையாக உள்ளன. இந்தத் தடைகளை உடைத்தெறிந்து, உங்களை ஒரு சிறந்த வீட்டுத்தோட்ட விவசாயியாக மாற்ற ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் வழங்கும் 30 நாள் இணையவழிப் பயிற்சி இது.
எங்கள் அடிப்படை நோக்கம்: ஒரு நபரின் தினசரி காய்கறி மற்றும் கீரைத் தேவையைப் பூர்த்தி செய்ய வெறும் 100 சதுர அடி இடமே போதுமானது. ஒரு முழு குடும்பத்திற்கும் ஒரு சென்ட் இடம் போதும். அந்த இடம் உங்கள் வீட்டின் மாடியாகவோ, பயன்படுத்தப்படாத நிலமாகவோ, அல்லது விவசாயமே செய்ய முடியாது என நீங்கள் நினைக்கும் பாறை நிலமாகவோ, கட்டாந்தரையாகவோ கூட இருக்கலாம். சரியான முறையில் அணுகினால் எங்கும் பசுமையை உருவாக்கலாம்.
பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொள்வது என்ன?
- வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் 30 நாட்களுக்கு 20 வெவ்வேறு தலைப்புகளில் எளிய வழிகாட்டுதல்.
- நம்மைச் சுற்றிலும் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி குறைந்த செலவில் தோட்டம் அமைப்பது.
- மண் கலவை தயார் செய்தல், பூச்சி விரட்டி தயாரிப்பு மற்றும் இயற்கை உரங்கள் மேலாண்மை.
- விதை சேமிப்பு தொழில்நுட்பம்: ஒருமுறை விதையை வாங்கி விளைவிப்பதோடு நிற்காமல், அடுத்தடுத்த போகங்களுக்குத் தேவையான விதைகளை நாமே எப்படித் தேர்வு செய்து சேமிப்பது என்ற மரபுத் தொழில்நுட்பம்.
பங்கேற்பாளர்களுக்கான சிறப்பு சலுகை: பயிற்சியில் இணையும் அனைவருக்கும், தோட்டத்தைத் துவங்கத் தேவையான அடிப்படையான 25 வகையான பாரம்பரிய மரபு ரக விதைகள் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
இணைய விருப்பமுள்ளவர்களுக்கு:
- தொடர்பு எண்: 085263 66796 (WhatsApp Only)
- இடம்: ஆதியகை, ஒட்டன்சத்திரம்.
(அடுத்த பயிற்சி வகுப்புகள் எப்போது தொடங்கும் என்ற விவரங்களை அறிய எங்களை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும்).
